முதலமைச்சர் வேலையை ஆளுநர் பார்க்கக் கூடாது - சரத்குமார்

Oct 16, 2018 06:43 PM 641

கரூரை அடுத்த வெண்ணைமலையில் செயல்படும் தனியார் பள்ளியில் உடல்நல விழிப்புணர்வு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில ஆட்சியின் நிறை, குறைகளை மத்திய அரசுக்கு எடுத்து சொல்வது மட்டும் தான் ஆளுநரின் வேலை என்று குறிப்பிட்டார். முதலமைச்சரின் வேலையை ஆளுநர் பார்க்க வேண்டிய வேலையில்லை என்றும் சரத்குமார் தெரிவித்தார். பிரதமரின் வேலையை குடியரசுத் தலைவர் பார்க்கலாமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சின்மயி விவகாரத்தைப் பொறுத்த வரை பெண்ணை மதிக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு பெண்ணையும் தாயென கருத வேண்டும் என்றும் சரத்குமார் கூறியுள்ளார். கால தாமதமாக சொன்னாலும் தவறென்றால் தவறுதான் என அவர் உறுதிபட கூறியுங்ளளார்.

Comment

Successfully posted