தேனி மாவட்டத்தில் விரைவில் அரசு சட்டக்கல்லூரி தொடங்கப்படும்-துணை முதலமைச்சர்

Aug 19, 2019 01:24 PM 144

தேனி மாவட்டத்தில் விரைவில் அரசு சட்டக்கல்லூரி தொடங்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தேனியில் தமிழக அரசின் மானிய விலை இருசக்கர வாகனங்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவுக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நிகழ்ச்சியில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர், அதிமுக ஆட்சியில் தேனி மாவட்டத்தில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் துவங்கப்பட்டதை குறிப்பிட்டார். தேனியில் விரைவில் சட்டக் கல்லூரி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்படும் என தெரிவித்த துணை முதலமைச்சர், அதிமுக ஆட்சியில் தேனி மாவட்டம் கல்வி மையமாக உருவெடுத்து வருவதாக குறிப்பிட்டார்.

Comment

Successfully posted