குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம்: மூவருக்கும், 15 நாட்கள் நீதிமன்ற காவல்

Jan 25, 2020 06:36 AM 465

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேட்டில் கைது செய்யப்பட்ட மூவரையும், 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி தேர்வின் போது, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் ஆகிய தேர்வு மையங்களில் முறைகேடு நடந்தது குறித்து விசாரணை நடத்தியதில், ரமேஷ், திருக்குமரன், நிதிஷ்குமார் ஆகிய  மூவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.


3 பேர் மீதும் 13 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்களை. டி.என்.பி.எஸ்.சி தகுதி நீக்கம் செய்தது. இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மூவரையும், நேற்று இரவு 10.15 மணியளவில், சென்னை எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள மாஜிஸ்திரேட் நாகராஜ் முன்னிலையில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். விசாரணைக்கு பிறகு, மூவரையும் பிப்ரவரி 7 ஆம் தேதி வரை, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து மூவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Comment

Successfully posted