மெரினாவில் குடியரசு தினத்தை முன்னிட்டு காவலர்களின் ஒத்திகை நிகழ்ச்சி

Jan 23, 2020 09:47 AM 371

71வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு, சென்னை மெரினாவில் முப்படை வீரர்கள் மற்றும் காவலர்களின் ஒத்திகை அணிவகுப்பு மற்றும் மாணவ, மாணவிகளின் கண்கவர், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

வருகிற 26ம் தேதி குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை மெரினாவில் காவல்துறை, கடலோர காவல்படை, விமானப்படை, குதிரைப் படை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் ஒத்திகை அணிவகுப்பு  நடத்தப்பட்டது. தேசியக் கொடியை ஆளுநர் ஏற்றுவது போன்ற ஒத்திகையின் போது, மரியாதை செலுத்தும் வகையில், மலர்தூவி விமானப்படை ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமிட்டன. மேலும், காவல்துறை சார்பில் வீரதீர சாகச ஒத்திகை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பிற மாநிலத்தவரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஒத்திகை நிகழ்ச்சியை ஒட்டி,  காமராஜர் சாலையில் சாந்தோம் சர்ச் முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

Comment

Successfully posted