கொய்யா சாகுபடி செய்யும் பொறியியல் படித்த விவசாயி

Feb 04, 2019 02:11 PM 144

திருப்பூர் அருகே கஸ்தூரிப்பாளையத்தில் பொறியியல் படித்த விவசாயி இயற்கை முறையில் கொய்யா சாகுபடி செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார்.

வெள்ளக்கோவில் புதுப்பை அருகே உள்ளது கஸ்தூரிபாளையம் கிராமம். ஆழ்துளை கிணறு அமைத்து சொட்டு நீர் பாசனம் மூலம் விவசாயம் செய்யும் இவர், லக்னோ49 ரக கொய்யாக்களை இயற்கை முறையில் சாகுபடி செய்து விற்பனை செய்து வருகிறார். சுமார் 4 ஏக்கருக்கு மேல் கொய்யா சாகுபடி செய்து, கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள பழமுதிர் அங்காடிகளுக்கு விற்பனை செய்து வருகிறார். இதில் நல்ல வருமானம் ஈட்டிவரும் விவசாயி பாலகிருஷ்ணன், மேலும் ஒரு ஏக்கரில் கொய்யா பயிரிட்டுள்ளதாக தெரிவிக்கிறார்.

Comment

Successfully posted