சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் கின்னஸ் சாதனை படைத்த ராமநாதபுரம் மாணவர்கள்

Sep 24, 2019 08:19 AM 340

மலேசியாவில் நடந்த சர்வதேச சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் கின்னஸ் சாதனை படைத்த ராமநாதபுரம் மாணவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப போட்டியில் தமிழகத்தில் இருந்து கலந்து கொண்ட 250 மாணவர்கள் ஒரே நேரத்தில் ஒன்றாக சிலம்பம் சுற்றியும், தீப்பந்தம் சுற்றியும் கின்னஸ் சாதனை படைத்தனர். இது அந்த நாட்டு பத்திரிகையிலும் செய்தியாக வெளியானது. இந்த சாதனை நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களும் பங்கு பெற்று இருந்தனர். இதனையடுத்து பதக்கங்களுடன் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவை சந்தித்த மாணவர்கள், அவரிடம் வாழ்த்து பெற்றனர். மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்றது மேலும் ஊக்கமளிப்பதாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Comment

Successfully posted