ராஜஸ்தானில் குஜ்ஜார் இன மக்கள் ரயில் மறியல் போராட்டம்

Feb 10, 2019 12:58 PM 170

5 சதவீத இடஒதுக்கீடு கோரி ராஜஸ்தானில் குஜ்ஜார் இன மக்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 5 சதவீத இடஒதுக்கீடு கோரி ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் இன மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியதை தொடர்ந்து, இந்த போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

இதனிடையே நேற்று முன்தினம் முதல் ரயில் மறியல் போராட்டத்தை தொடங்கிய அவர்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாவது நாளான இன்று தண்டவாளத்தில் கூடாரம் அமைத்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Comment

Successfully posted