இருவேறு மசூதிகளில் மர்மநபர்கள் தொடர் துப்பாக்கிச்சூடு

Mar 15, 2019 12:07 PM 302

நியூசிலாந்தின் கிரைஸ்ட் சர்ச் பகுதியில் உள்ள மசூதிகளில் மர்ம நபர்கள் நடத்திய சூப்பாக்கிச் சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பெண் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கிரைஸ்ட் சர்ச் பகுதியில் உள்ள அல்நூர் என்ற மசூதியில் இன்று காலை திடீரென புகுந்த மர்ம நபர்கள், அங்கு தொடர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதையடுத்து அதே பகுதியில் மற்றொரு மசூதியிலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.

அங்கு அதிகளவில் கூடிய போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட 4 பேரை கைது செய்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தப் பகுதியில் இருந்து அதிகளவிலான வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்ப்டடுள்ளன. தாக்குதலையடுத்து நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து சென்றுள்ள வங்கதேச கிரிக்கெட் அணியினர், அந்தப்பகுதியில் இருந்து சென்ற சிறிது நேரத்தில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து, நாளை நடைபெறவிருந்த நியூசிலாந்து - வங்கதேசத்திற்கிடையிலான இறுதி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் சிறிது காலத்திற்கு மசூதிகளுக்கு செல்லவேண்டாம் என்றும் மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

Comment

Successfully posted