அமெரிக்காவின் கன்ஸஸ் மாகாணத்தில் ஆலங்கட்டி மழை

May 10, 2021 06:16 PM 1198

அமெரிக்காவின் கன்ஸஸ் ((kansas)) மாகாணத்தில் பெய்த ஆலங்கட்டி மழையால், வீடுகளின் சன்னல்கள், கார்களின் கண்ணாடிகள் சேதமடைந்தன.

ஹேஸ்((Hays)) பகுதியில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கோல்ஃப் பந்து அளவில், வானில் இருந்து விழுந்த ஆலங்கட்டிகளால் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகள் சேதமடைந்தன.

மழையுடன் பலத்த காற்றும் வீசியதால், சில இடங்களில் மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்தன

Comment

Successfully posted