நெருப்போடு விளையாடி அழகை மெருகேற்றும் இளைஞர்கள்

Jul 10, 2019 09:28 AM 160

அழகு கலையின் மிக முக்கிய அங்கம் வகிப்பது தான் சிகை அழகு. அந்த சிகை அழகு பற்றிய ஒரு சிறிய தொகுப்பினை தற்போது காணலாம்.

நமது முகத்தோற்றத்தையே, ஏன் வயதையே மாற்றும் வல்லமை சிகை அழகிற்கு உண்டு. காரணம் அது நன்றாக அமையும் பொருட்டே முகத்தின் வடிவமைப்பு அழகு பெறுகிறது. அப்படிப்பட்ட இந்த சிகை அழகு எங்கிருந்து தோன்றியது..?

1869 ஆம் ஆண்டில் சீனாவை சேர்ந்த ஜான் தாம்சன் என்ற பெண்தான், முதன் முதலில் வெல்கம் ஹேர்ஸ்டைல் என்ற பெயரில் சிகை அழகு கலையை கொண்டு வந்தவர். அன்று தொடங்கி இன்று பல பரிமாணங்களில் இந்த சிகை அழகுக்கலை இருந்து வருகிறது. 15 ஆம் நூற்றாண்டில் நீளமான சிகை கலாச்சாரம், 16 ஆம் நூற்றாண்டில் அலங்கரித்த சிகை கலாச்சாரம், அதன் பிறகு மெல்ல மெல்ல மெருகேறி இன்று எண்ணிலடங்கா சிகை அழகு கலாச்சாரங்கள் உருவாகியுள்ளன. இந்த சிகை அலங்காரம் மக்களை பெரிதும் கவரவே, திரைப்படங்களில் வித விதமான சிகை அலங்காரங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த சிகை அலங்காரங்கள் எப்படி செய்யப்படுகிறது. மக்கள் எப்படியெல்லாம் விரும்புகிறார்கள்...? கேட்போம்...

ஒரு காலத்தில் கத்தரிக்கோலின் உதவியுடன் மட்டுமே இந்த சிகை அலங்காரங்கள் செய்யப்பட்டது. ஆனால் இன்றோ, வரம்பை மீறி, துணிச்சலை ஊட்டி, அழகிற்காக அசாதரணமாக, அபாயகரமான விஷயங்களை கையிலெடுக்கிறார்கள். அதுதான் ஃபையர் கட் எனப்படும் நெருப்பின் மூலம் செய்யும் சிகை அலங்காரம்..

தீ பட்டால் சிகை கருகிவிடும் என அஞ்சுவோர் மத்தியில், தீயின் மூலமே சிகை அலங்காரமும் நடந்து வருகிறது. சிகையில் நெருப்பூட்டி, அதில் சீப்புக் கொண்டு சிகையை படிய வைக்கும் முறையை இன்றைய இளைஞர்கள் பெரிதும் விரும்புகின்றனர். இது சற்று அசாதரணமான விஷயம் என்றாலும், அதனையும் சில சிகை அலங்காரம் செய்பவர்கள் சாதாரணமாகவே செய்கின்றனர்.

எது எப்படியிருந்தாலும், இயற்கையிலிருந்து செயற்கையை நோக்கி நடைபோடும் நம் இன்றைய வாழ்வில், சிகை அலங்காரம் மிக முக்கியமானது என்றாலும், அதற்காக நாம் பின்பற்றும் வழிமுறைகளும் சற்று உற்று நோக்க வேண்டியதே..

Related items

Comment

Successfully posted