ஹஜ் புனிதப் பயணம் ரத்து, 60000 நபர்களுக்கு மட்டும் அனுமதி - இந்திய ஹஜ் கமிட்டி

Jun 16, 2021 11:06 AM 2124

கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டு ஹஜ் பயணம் ரத்து செய்யப்படுவதாக இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது. இதனால், அனைத்து ஹஜ் பயண விண்ணப்பங்களும் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள இந்தாண்டில் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்க சவுதி அரேபிய முடிவு செய்துள்ளது. மேலும், சவுதி அரேபியாவில் இருப்பவர்கள் மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியும் என்றும் வெளிநாட்டினருக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comment

Successfully posted