சென்னையில் ரூ. 15 கோடி மதிப்பீட்டில் ஹஜ் கமிட்டி கட்டிடம் : முதலமைச்சர் அறிவிப்பு

Feb 19, 2020 03:20 PM 372

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில் உலமாக்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து, மூவாயிரமாக உயர்த்தி வழங்கப்படும் எனவும், சென்னையில் ஹஜ் கமிட்டி கட்டடம் கட்ட 15 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.மேலும் உலமாக்கள் புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க ரூ.25,000 மானியமாக வழங்கப்படும் எனவும், குழந்தைகள் மற்றும் கூர் நோக்கு இல்லங்களில் வசித்தோருக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்கப்படும் எனவும் அறிவித்தார். \

இதேபோல் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி, மாநில பெண் குழந்தைகளின் பாதுகாப்பு நாளாக கடைபிடிக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

Comment

Successfully posted