நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம்

Apr 15, 2019 09:52 AM 211

நாடு முழுவதும் மே 5 ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவு தேர்வு வரும் மே 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஹால் டிக்கெட் இன்று முதல் www.nta.ac.in மற்றும் www.ntaneet.nic.in என்ற இணையதளங்களில் இருந்து பதவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நீட் தேர்வுக்கு நாடு முழுவதிலும் இருந்து 15 லட்சத்து 19 ஆயிரம் பேரும், தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர். நாடு முழுவதும் 154 நகரங்களில் நடைபெறும் நீட் தேர்வு, தமிழகத்தில் மட்டும் சென்னை, காஞ்சிபுரம், மதுரை, கரூர், நாகர்கோவில், சேலம், நாமக்கல் உள்ளிட்ட 14 நகரங்களில் நடைபெறுகிறது.

தமிழகத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் நடைபெறவுள்ள நீட் தேர்வை, தமிழில் எழுத விண்ணபித்த மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் தமிழகத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted