சிறுவர்களுக்கு கைகழுவ சொல்லிக்கொடுக்கும் வைரல் வீடியோ!

Mar 14, 2020 04:34 PM 510

உலகம் முழுவதும்  பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவும், மருத்துவர்களுக்கு சவாலாகவும் `கொரோனா’ வைரஸ் உருவெடுத்திருக்கிறது. கொரோனா தொடர்பான விழிப்புணர்வு விளம்பரங்களும், செய்திகளும், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என சமூகவலைதளங்களில் ஷேர் செய்யபட்டுவருகின்றனர். `சேனிடைஸர்’ கொண்டு கைகழுவ பல்வேறு நிறுவனத்தைச்சேர்ந்த நிர்வாகங்கள் அவர்களின் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் சார்பிலும் கைகழுவுவதன் முக்கியத்துவம் குறித்து பரப்புரை செய்யப்படுகிறது.

இந்நிலையில், சிறுவர்களுக்கு கைகழுவுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கும் வகையில் ட்விட்டரில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் கைகழுவாமல் இருந்தால் என்னமாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்றும், அதே நேரத்தில் கைகழுவினால் ஏற்படும் நன்மைகள் குறித்து அழகான முறையில் விளக்கப்பட்டுள்ளது. ஏராளாமானோர் இதனை ஷேர் செய்து வருகின்றனர். 

Comment

Successfully posted