மாற்றுத்திறனாளி இளைஞரிடம் இருந்து செல்போன் பறிப்பு

Dec 14, 2019 07:30 PM 345

சென்னை முகப்பேரில் மாற்றுத்திறனாளி இளைஞரிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

முகப்பேரில் வசிக்கும், சூரியராஜ் என்பவர் வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், சூர்யராஜிடம் இருந்து செல்போனை பறித்து சென்றனர். அப்போது மாற்றுத்திறனாளியான சூர்யராஜை தாக்கியதுடன் சிறிது தூரம் அவரை தரதரவென இழுத்து சென்றனர். இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

Comment

Successfully posted

Super User

மாற்றுத்திறனாளினு தெரிந்து திருடுறானே அவனுக்கு கேவலமா இல்ல. அவன் திருட உதவுன கைய ஒடைக்கனும் அப்பத்தெரியும் மாற்றுத்திறனாளி வலி