சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் வங்கி ஊழியர் வீட்டில் மர்மநபர்கள் கைவரிசை

Oct 07, 2019 10:01 AM 76

சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் வங்கி ஊழியர் வீட்டில் 70 சவரன் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நுங்கம்பாக்கம் அடிக்குமாடிக் குடியிருப்பில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். தனியார் வங்கி துணைத் தலைவரான இவர் குடும்பத்தினருடன் வட நெம்மேலியில் உள்ள பண்ணை வீட்டிற்குச் சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து 70 சவரன் நகை மற்றும் 500 கிராம் வெள்ளியைக் கொள்ளையடித்துச் சென்றனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விஸ்வநாதன் காவல்துறையினருக்குப் புகாரளித்தார். கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்ற்னர்.

Comment

Successfully posted