தமிழ் பட போஸ்டரை வெளியிடும் "தமிழ் புலவர்" ஹர்பஜன் சிங்

Sep 11, 2019 03:50 PM 266

ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் first look போஸ்டரை இந்திய அணி வீரரும், சுழற்பந்துவீச்சாளருமான ஹர்பஜன் சிங் வெளியிட உள்ளார்.

இந்திய சினிமா வரலாற்றில் ஒரு படத்தின் போஸ்டரை கிரிக்கெட் வீரர் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும். அக்சஸ் ஸ்டூடியோ தயாரிக்கும் இப்படத்தை சதீஷ் செல்வகுமார் இயக்குகிறார். நாளை மாலை 6 மணிக்கு இந்த படத்தின் டைட்டில் மற்றும் first look வெளியாகவுள்ளது. இந்த தகவலை நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாட ஆரம்பித்த பிறகு தமிழ் மொழியில் பல ட்வீட்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனை போற்றும் விதமாகவே இந்த சிறப்பு ஏற்பாட்டை படக்குழு செய்துள்ளது.

Comment

Successfully posted