நீ தோத்துட்டன்னு இந்த உலகமே சொன்னாலும் நம்ப வேண்டியது உலகத்த இல்ல உன்ன மட்டும் தான்: ஹர்பஜன் சிங்

Apr 07, 2019 07:34 AM 270

சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், நடிகர் அஜித்தின் விவேகம் பட டயலாக்கை டிவிட் செய்துள்ளது வைரலாக பரவி வருகிறது.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி பஞ்சாப்பை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கடந்த 2 ஆட்டங்களில் ஓய்வளிக்கப்பட்டிருந்த சென்னை அணியின் சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் இந்தப் போட்டியில் களமிறக்கப்பட்டார்.

இந்நிலையில் போட்டியில் 2-வது ஓவரை வீசிய ஹர்பஜன் சிங் ரன் ஏதும் கொடுக்காமல் பஞ்சாப் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான கிறிஸ் கெய்ல் மற்றும் அகர்வாலை வீழ்த்தினார். மொத்தம் 4 ஓவர் வீசிய அவர் 17 ரன்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தி சென்னை அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

இந்நிலையில் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் விவேகம் படத்தில் அஜித் பேசும் ”நீ தோத்துட்டன்னு இந்த உலகமே சொன்னாலும்” என்று தொடங்கும் தமிழ் வசனத்தை போன்றதொரு வசனத்தை டிவிட் செய்துள்ளார். இந்த டிவிட் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Comment

Successfully posted