'ஒய் திஸ் கொலைவெறி' பாடல்; பாண்டிய சகோதரர்களின் வைரல் வீடியோ

Aug 12, 2019 01:55 PM 195

இந்திய அணியில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தற்போது நட்சத்திர வீரர்களாக ஜொலிப்பவர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் குருணால் பாண்டியா. இருவரும் சகோதரர்கள். ஐபிஎல் போட்டியில் இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்கள். பல நேரங்களில் அடிக்க முடியாத ரன்களை எளிதாக அடித்து அணிக்கு வெற்றியை தேடி தருபவர்கள். இருவரும் சிறந்த ஆல்ரவுண்டர்கள்.

இந்நிலையில், இந்திய அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் போட்டி முடிந்த பிறகு, ஓய்வு இருந்தால், புதுமையான இடங்களுக்கு தங்களது குடும்பத்தினருடன் சென்று பொழுதுபோக்கை கழித்து வருவதை புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவார்கள். இதேபோல் தான், தற்போது பாண்டியா மற்றும் குருணால் பாண்டியா ஆகிய இருவரும் தனுஷ் நடித்த தமிழ் படத்தின் பாடல் ஒன்றை பாடி அசத்தி இருக்கின்றனர். இதை வீடியோவாக எடுத்து குருணால் பாண்டியா டுவிட்டர் பதிவில் வெளியிட்டதை அடுத்து வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தனுஷ் நடிப்பில் 2012-ல் வெளியான படம் 3. இத்திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த "ஒய் திஸ் கொலைவெறி" என்று தொடங்கும் பாடல் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted