மாநிலங்களவைத் துணைத் தலைவராக ஹரிவன்ஷ் நாராயண் சிங் தேர்வு

Aug 09, 2018 02:03 PM 375

மாநிலங்களவைத் துணைத் தலைவராக இருந்த பி.ஜே.குரியனின் பதவிக்காலம் ஜூலை 1ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, துணைத் தலைவரை தேர்வு செய்தற்கு அவைத் தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், பாஜக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் 125 வாக்குகள் பெற்றார். எதிர்க்கட்சி வேட்பாளர் ஹரி பிரசாத்திற்கு 105 வாக்குகள் கிடைத்தது. இதையடுத்து, 20 வாக்குகள் வித்தியாசத்தில் ஹரிவன்ஷ்  வெற்றி பெற்று, மாநிலங்களவை துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

Comment

Successfully posted