இளையராஜாவிற்கு ஹரிவராசனம் விருது வழங்கியது கேரளா

Jan 17, 2020 04:11 PM 643

இசைஞானி இளையராஜாவை கௌவரப்படுத்தி கேரள அரசு அவருக்கு ஹரிவராசனம் விருதை வழங்கியுள்ளது.

மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்க்காக அதிக பங்களிப்பு அளித்தவர்களுக்கு ஹரிவராசனம் விருதை கேரள அரசாங்கம் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விருதை இசைஞானி இளையராஜாவிற்கு வழங்கியுள்ளது. சபரிமலை சன்னிதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒரு லட்சம் ரூபாய் பணம், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் இளையராஜாவிற்கு வணக்கத்திற்குரிய இசைஞானி என்ற பட்டமும் வழங்கி கெளரவித்துள்ளது.

Comment

Successfully posted