இரட்டை கொலை வழக்கில் ஹரியானா நீதிமன்றம் உத்தரவு

Oct 16, 2018 02:56 PM 439

ஹரியானா மாநிலம் ஹிசார் மாநிலத்தைச் சேர்ந்த சாமியார் ராம்பால் மீது, டெல்லியைச் சேர்ந்த ஷிவ்பால் என்பவர் ஹரியான காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில், தனது மனைவியை ஆசிரமத்தில் அடைத்து வைத்து, பாலியல் தொல்லை கொடுத்து கொன்றதாக கூறியிருந்தார்.  இதேபோல், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும், ராம்பால் மீது புகார் அளித்திருந்தார்.

இந்த இரட்டை கொலை வழக்கை விசாரித்த ஹரியானா நீதிமன்றம், ராம்பால் மற்றும் அவரது சீடர்கள் 26 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழக்கப்பட்டது. இதில், சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

Comment

Successfully posted