எம்.எஸ்.தோனி, சிறந்த வீரர்களில் ஒருவராக களமிறங்குவார்: ரவிசாஸ்திரி

Oct 09, 2019 09:03 PM 949

இந்திய அணிக்காக ஒருநாள் போட்டி மற்றும் இருபது ஓவர் தொடர்களில் மட்டும் விளையாடி வருபவர் எம்.எஸ்.தோனி. 38 வயதான இவரது தலைமையில், இந்திய அணி இரண்டு உலக கோப்பைகளை வென்றது. இந்த நிலையில், 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் எம்.எஸ்.தோனி கடைசியாக விளையாடினார். இதனையடுத்து, இந்திய இராணுவத்துக்கு பணியாற்றுவதற்காக ஓய்வெடுத்துக் கொண்டார். இதனால், மேற்கு இந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மற்றும் தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து, தோனியின் எதிர்காலம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் உள்பட பலரும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, தோனி குறித்து தனியார் ஊடகத்துக்கு பதிலளித்துள்ளார்.

எம்.எஸ்.தோனி எங்கள் சிறந்த வீரர்களில் ஒருவராக களமிறங்குவார். அவர், மிகவும் உயர்ந்த பட்டியலில் இருப்பதாக குறிப்பிட்ட ரவிசாஸ்திரி உலக கோப்பை தொடருக்கு பிறகு தோனியை தான் சந்திக்கவில்லை என்றும் இந்திய அணிக்கு திரும்ப விரும்பினால், அவர் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். முதலில் அவர் தனது விளையாட்டை தொடங்க வேண்டும், பிறகு மற்ற விவகாரங்களை பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

Comment

Successfully posted