சுகாதாரத் துறை அமைச்சருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் கேள்வி ??

Jun 19, 2021 06:08 PM 1211

செய்தியாளர் சந்திப்பில் தனது உளரல் பேச்சை வெளிப்படுத்தி வரும்  தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

image

நீட் தேர்வு அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாக தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் கூறியிருப்பது, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்து விட்டு, தற்போது நீட் தேர்வு உண்டு என்று அறிவித்திருப்பது, திமுக சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்பதை எடுத்துக்காட்டுவதாக சாடியுள்ளார். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது விட்டுவிட்டு, தற்போது அது குறித்து பேசுவது, தும்பை விட்டு வாலை பிடிப்பதற்கு சமம் என்று தெரிவித்துள்ளார்.
image
image

Comment

Successfully posted