சென்னை கஸ்தூரிபாய் மருத்துவமனையில் கூடுதலாக 200 படுக்கைகள்!

Jul 25, 2020 03:12 PM 382

சென்னை கஸ்தூரிபாய் தாய் சேய் நல மருத்துவமனையில் கூடுதலாக 200 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் தாய் சேய் நல மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கஸ்தூரிபாய் தாய் சேய் நல மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக ஏற்கனவே 100 படுக்கைகள் உள்ள நிலையில், கூடுதலாக 200 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக கூறினார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஒருபுறம் நடைபெறும் நிலையில் டெங்கு காய்ச்சலை தடுக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். 

Comment

Successfully posted