வெப்பச்சலணம் காரணமாக தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை

May 19, 2021 02:33 PM 437

வெப்பச்சலணம் காரணமாக தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, தேனி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்பது வானிலை மையத்தின் கணிப்பு.

ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும்,மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted