அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

Aug 13, 2019 11:43 AM 98

அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்துள்ள அம்மாபேட்டை, பூதப்பாடி, உமாரெட்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை நேரங்களில் வானம் மேக மூட்டமாக காணப்பட்டு வந்தது. இதனையடுத்து பிற்பகல் மிதமான காற்றுடன் மழை பொழிய துவங்கியது. இதனால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதேபோல் புவனகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்ததால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழக அரசு குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு வாய்க்கால்கள், குட்டைகள், குளங்கள் ஏரிகள் போன்றவற்றை தூர்வாரி வருவதால், மழைநீர் சேகரிப்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்று பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Comment

Successfully posted