மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் 2 நாட்களாக கனமழை

Oct 20, 2019 12:43 PM 200

குற்றாலம் மற்றும் ஐந்தருவியின் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நெல்லை மாவட்டத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில், கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால், மாவட்டம் முழுவதிலும் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

கனமழை காரணமாக குற்றாலம் மற்றும் ஐந்தருவியின் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Comment

Successfully posted