தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

Jul 18, 2019 09:43 AM 77

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள எல்லை மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.வெப்பச்சலனம் காரணமாக விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும், தென்மேற்குப் பருவமழை காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய திருநெல்வேலி, தேனி, கோவை, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted