சென்னை உட்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Oct 17, 2019 03:38 PM 77

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உட்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்,வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அவர் கூறினார். தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் மாலத்தீவு, லட்சத்தீவு, கேரள கடல்பகுதிக்கு மீனவர்கள்செல்ல வேண்டாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார். அடுத்த 2 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் படிப்படியாக மழை குறைந்து பின்னர் மீண்டும் அதிகரிக்கும் எனவும் புவியரசன் தெரிவித்தார்.

Comment

Successfully posted