ஆம்பூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கன மழை

Jul 11, 2019 10:15 PM 73

வேலூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் கனமழை பெய்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில மாதங்களாக பருவ மழை பொழியாமல் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் அப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை மற்றும் விவசாய நிலங்களில் சாகுபடி பயிரான வேர்க்கடலை பயிர் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர். இந்த நிலையில் ஆம்பூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் திடீரென ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக கன மழை பெய்தது. இதனால் அப்பகுதி முழுவதும் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. கடுமையான வெயிலால் வறட்சி நிலவிய அப்பகுதியில், நீண்ட நாட்களாக மழையை எதிர்ப்பார்த்து காத்திருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், இந்த மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Comment

Successfully posted