சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

Nov 21, 2019 08:49 AM 162

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை நேரத்தில் கனமழை பெய்தது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச் சலனம் மற்றும் லேசான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை நேரத்தில் கனமழை பெய்தது. மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், ஆதம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.

இதேபோல், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான சின்னாளப்பட்டி, செம்பட்டி, அய்யம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் நேற்றிரவு மழை பெய்தது. பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், இரவில் பெய்த திடீர் மழையால் குளிர்ச்சி நிலவி வருகிறது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Comment

Successfully posted