டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

Oct 24, 2019 06:44 AM 114

குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைவதால் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனையடுத்து வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு திசையை நோக்கி நகர்ந்து ஆந்திரா கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளதால், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் லேசான மழை பெய்யும் என்றும் கூறியுள்ளது. இதனை தொடர்ந்து மீனவர்கள் ஆந்திரா மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் புயல் ஏற்பட வாய்ப்பிருப்பதால் , இரண்டு நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

Comment

Successfully posted

Super User

சார் தஞ்சாவூர் மாவட்டத்திக்கு பாதிப்பு இல்லை