கேரளாவில் கனமழை - முதல்வர் பினராயி விஜயன் ராணுவ உதவி கோரல்

Aug 09, 2018 03:43 PM 1480

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த 2 மாதங்களாக கேரளா மற்றும் கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது.  கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை  காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 20  பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், முதலமைச்சர் பினராயி விஜயன் ராணுவ உதவியை கோரியுள்ளார்.    கடலோர காவல்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படையின் உதவி கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted