புயல் சேதத்தை முழுமையாக பார்வையிடவே ஹெலிகாப்டர் பயணம் -அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

Nov 23, 2018 01:24 PM 344

புயல் சேதத்தை முழுமையாக பார்வையிடவே ஹெலிகாப்டரை முதலமைச்சர் பயன்படுத்தியதாக, தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு, அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

உவமை கவிஞர் சுரதாவின் 98-வது பிறந்த நாள் விழா தமிழக அரசு சார்பில் இன்று கொண்டாட்டப்பட்டது. சென்னை அசோக் பில்லர் பகுதியில் உள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்டு இருந்த திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் தமிழக அரசு நடவடிக்கையை தொடர்ந்து, புயல் சேதங்களை பார்வையிட பிரதமர் மோடி மத்திய குழுவை அனுப்பியுள்ளதாக தெரிவித்தார். நிவாரணத் தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஸ்டாலின் குறை சொல்வதையே வாடிக்கையாக வைத்திருப்பதாக விமர்சித்த அமைச்சர் ஜெயகுமார், புயல் சேதத்தை முழுமையாக பார்வையிட முதலமைச்சர் ஹெலிகாப்டரை பயன்படுத்தியதாக தெரிவித்தார்.

 

Comment

Successfully posted