உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு விரைவில் மடிக்கணினி:அமைச்சர் செங்கோட்டையன்

Jan 12, 2019 04:09 PM 451

அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு விரைவில் 80 ஆயிரம் மடிக்கணினிகள் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு கணபதி பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 241 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் வழங்கினர். இதையடுத்து ஒளிரும் காலமங்களம் என்ற புதிய பவுண்டேஷனை துவக்கி வைத்தனர். அரசு மேல்நிலைப்பள்ளியை தத்தெடுக்கும் நிகழ்ச்சியையும் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக் கல்வி துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாக கூறினார்.

Comment

Successfully posted

Super User

ஆற்றல் நாயகன்