உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்டக் குழுக் கூட்டம்

Sep 16, 2019 02:13 PM 171

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பாகத் தலைநகர் டெல்லியில் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடந்த கூட்டத்தில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறைச் செயலாளர் ஏ.கே.பல்லா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கபட்டதாகக் கூறப்படுகிறது.

Comment

Successfully posted