ஹாக்கி விளையாட்டில் சாதனை படைத்து வரும் தலைமைக் காவலர்

Oct 17, 2019 12:42 PM 152

சர்வதேச போட்டிகளில் தங்கம் வெல்வதே லட்சியம் என ஹாக்கி வீராங்கனையும் தலைமைக் காவலருமான தேன்மொழி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டைச் சேர்ந்த தேன்மொழி, தென்சென்னை சங்கர் நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். ஹாக்கி வீராங்கனையான அவர், பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஹாக்கி போட்டியில் அவர் பங்கேற்றார். இந்தப் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இடம் பிடித்தது. இதையடுத்து சென்னை திரும்பிய தேன்மொழி நியுஸ் ஜெ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாடு ஹாக்கி கூட்டமைப்புக்கு நன்றி தெரிவித்தார். தமிழக அரசு மேலும் உதவினால் சர்வதேச போட்டிகளில் தங்கம் வெல்ல முடியும் என அவர் குறிப்பிட்டார்.

Comment

Successfully posted