திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Nov 02, 2018 10:10 AM 298

டெல்டா மாவட்டங்களில் பரவலாக பெய்துவரும் கனமழை காரணமாக, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 13 சென்டிமீட்டர் மழையும், திருவாரூரில் 8 சென்டிமீட்டர், நன்னிலத்தில் 7 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

இந்நிலையில் தொடர்மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருவதால், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அளிப்பதாக, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதனிடையே, தஞ்சை மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

 

Comment

Successfully posted