ராஜமௌலி படத்தில் நடிக்கவுள்ள பிரபல ஹாலிவுட் பிரபலங்கள்

Nov 20, 2019 07:36 PM 502

பாகுபலி படத்தையடுத்து இயக்குநர் ராஜமௌலி அடுத்ததாக நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆரை வைத்து “ஆர்.ஆர்.ஆர்.”என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் ராம்சரண் ஜோடியாக பிரபல பாலிவுட் நாயகி அலியா பட் ஒப்பந்தமானார். ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக வெளிநாட்டை சேர்ந்த டெய்சி எட்கர் ஜோன்ஸ் நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென அவர் விலகி விட அவருக்கு பதிலாக இங்கிலாந்தை சேர்ந்த ஒலிவியா மோரிஸை ஒப்பந்தம் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

அல்லூரி சீத்தாராம ராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகிய சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை அடிப்படையாக கொண்ட இந்த படம் மிகப்பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. அதற்கு ஏற்றவாறு படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர்களை தேர்வு செய்துள்ளார்கள். வில்லனாக தோர், ரோம், ரெலிக் போன்ற படங்களில் நடித்த ரே ஸ்டீவன்ஸன் நடிக்கிறார்.அதேபோல் ஜேம்ஸ் பாண்டின் வியூ டு கில், இண்டியானா ஜோன்ஸ் படங்களில் நடித்த நடிகை ஆலிசன் டூடியு நடிக்கவுள்ளார். இதனால் இப்போது இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Comment

Successfully posted