கஜா புயல் பாதிப்புக்கு தேவையான உதவிகளை வழங்க தயார் - உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிவிப்பு

Nov 16, 2018 02:59 PM 375

கஜா புயல் பாதிப்புக்கு தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக முதலமைச்சரிடம் தொடர்பு கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கஜா புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயார் எனவும் முதலமைச்சரிடம் அவர் உறுதி அளித்துள்ளார்.

புயல் பாதிப்புகள் குறித்து கண்காணிக்கவும், நடவடிக்கைகள் எடுக்கவும் மத்திய உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

Comment

Successfully posted