குரூப்-1 தேர்வு வினாத்தாள் நேர்மையாக திருத்தப்படுகிறது - டி.என்.பி.எஸ். சி

Oct 30, 2018 09:30 AM 910

குரூப் 1 தேர்வுத்தாள் திருத்தும் பணி நேர்மையாக நடைபெறுவதாகவும், தவறான தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி குரூப்-I ல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான முதனிலைத் தேர்வினை நடத்தியது. இதற்கான முதன்மைத் தேர்வானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13-ம் தேதி முதல் 15 ம் தேதி வரை நடைபெற்றது. வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் இதற்கான தேர்வு முடிவுகள் வெளியிட உத்தேசிக்கப்பட்டு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே விடைத்தாள்கள் திருத்தும் பணி மிகவும் நேர்மையாகவும், பாதுகாப்பாகவும், ரகசியம் காப்பதில் மிகுந்த எச்சரிக்கையுடனும் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதனால் தேர்வு குறித்து வெளியாகும் தவறான மற்றும் அவதூறான செய்திகள் பற்றி தேர்வர்கள் கவலைப்படத் தேவையில்லை என வலியுறுத்தியுள்ளது.

மேலும் ஏமாற்றுக்காரர்கள் மற்றும் இடைத்தரகர்களின் தவறான வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Comment

Successfully posted