குடும்பத்தை அவமானப் படுத்திய மகள்; மகளை கவுரவக் கொலை செய்த குடும்பம்

Oct 03, 2021 04:29 PM 2737

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே தகாத உறவில் இருந்த அக்காவை சகோதரர்களே வெட்டி படு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ராமநாதபுரம் மாவட்டம் தோப்படைப்பட்டி கிராமத்தை சேர்ந்த அழகேஸ்வரி 30 வயதாகும் இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக தாய் தந்தையுடன் வசித்து வருகிறார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன.

கணவரிடம் கருத்து வேறுபாடு இருந்தாலும் அழகேஸ்வரிக்கு அதே பகுதியை சேர்ந்த ஆடவர்கள் பலருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது.

தொடக்கத்தில் திரைமறைவாக இருந்த உறவு, ஊரார் அனைவருக்கும் தெரிய வர, கள்ளக்காதலர்களின் உறவினர்கள் அழகேஸ்வரியின் வீட்டிற்கே வந்து அவரின் நடத்தையை சுட்டிக் காட்டி ரகளை செய்ய தொடங்கினர்.

அழகேஸ்வரி என்ற ஒரு தடம் மாறிய பெண்ணால் அவரது தாய், தந்தை, தம்பிகள் ஆகியோர் தினம் தினம் தலைகுனிய வேண்டி இருந்தது.

ஆனால் அத்தனை அவமானத்திற்கு சந்தித்த பிறகும் ஆழகேஸ்வரி தன் ஆட்டத்தை நிறுத்த வில்லை.

இதையடுத்து குடும்பத்தின் நலன் கருதி அழகேஸ்வரியை கவுரவ கொலை செய்வதென முடிவெடுத்தனர் குடும்பத்தார்.

இதையடுத்து அழகேஸ்வரியின் உடன் பிறந்த தம்பிகளான அரசகுமார், வினோத்குமார் ஆகியோர் அவரை வேலை இருப்பதாக கூறி வயல்காட்டிற்கு அழைத்து சென்றனர்.

பின் திட்டமிட்ட படி தாங்கள் கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து அவரை வெட்டிப்படுகொலை செய்து விட்டு வீடு திரும்பினர்.

மகன்களின் எதிர்காலம் பாதிக்க கூடாது என்பதால் அவர்களது தந்தை ஆதி, மகளை கொலை செய்து விட்டதாக கூறி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

ஆனால் கொடூரமாக சிதைக்கப்பட்ட சடலத்தை கண்டு சந்தேகம் அடைந்த போலீசார் ஆதியிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

முதலில் தயங்கி தயங்கி சமாளித்தவர் ஒரு கட்டத்தில் தன் மகன்கள் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து தந்தையை எச்சரித்து அனுப்பிய போலீசார் அழகேஸ்வரியின் சகோதரர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தவறான நடத்தையால் குடும்பத்திற்கு நேர்ந்த அவமானத்தை போக்க குடும்பமே சேர்ந்து ஒரு பெண்ணை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comment

Successfully posted