உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்: ராகுல் காந்தி

Nov 09, 2019 06:07 PM 79

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் மதிப்பதுடன், நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி, அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் மதிப்பதுடன் மத நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். சகோதரத்துவம், நம்பிக்கை மற்றும் அன்பை வெளிப்படுத்த வேண்டிய காலம் இது எனவும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜிவாலா, ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்துள்ளதை காங்கிரஸ் கட்சியும் ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தீர்ப்பு, கோவில் கட்டுவதற்கான கதவுகளைத் திறந்துவிட்டிருப்பதுடன், இதைவைத்து அரசியல் செய்வதற்கான வழிகளையும் அடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். 

Comment

Successfully posted