கரூரில் நடைபெற்ற குதிரை வண்டிப் பந்தயத்தில் சீறிப்பாய்ந்த குதிரைகள்

Feb 18, 2019 07:25 AM 164

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு கரூரில் நடைபெற்ற குதிரை வண்டிப் பந்தயத்தில் குதிரைகள் சீறிப்பாய்ந்தன

கரூர் மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி குதிரை வண்டிப் பந்தயம் நடைபெற்றது.பெரிய  குதிரை, நடு குதிரை, புது குதிரை என 3 பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டிகளில் கரூர்,திருச்சி,  தஞ்சாவூர்,  சேலம், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து 50க்கும் அதிகமான குதிரைகள் கலந்து கொண்டன.  கரூர் ஈரோடு சாலையிலிருந்து,  சத்திரம் வரை நடைபெற்ற இந்த குதிரை வண்டி பந்தயத்தை பொதுமக்கள் இருபுறமும் திரண்டு நின்று பார்த்து ரசித்தனர். போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், வெற்றி பெற்ற குதிரைகளின் உரிமையாளர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய், 20 ஆயிரம் ரூபாய் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசுகள் மற்றும் கேடயம் ஆகியவற்றை வழங்கினார்.

Comment

Successfully posted