மகளிர் பெயரில் வீடுகள் பதிவு செய்யப்படும் - பிரதமர் மோடி

Feb 12, 2019 06:37 PM 100

மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள் மகளிர் பெயரில் பதிவு செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அரியானா மாநிலம், குருஷேத்ரா நகரில் பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதையடுத்து பேசிய அவர், ஐரோப்பாவில் உள்ள ஒரு இடத்தில் வீடுகளின் முகப்பில் வரையப்பட்டுள்ள அழகிய சுவரோவியங்களை கண்டு ரசிப்பதற்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்வதை சுட்டிக்காட்டி பேசிய பிரதமர், இந்திய கிராமங்களில் ஓவியங்களுடன் கூடிய கழிப்பறைகளை காண சுற்றுலாப் பயணிகள் வரும் காலம், ஒருநாள் வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும்,மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள் மகளிர் பெயரில் பதிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார் தூய்மை இந்தியா திட்டம் பற்றி அறிய வந்த நைஜீரிய குழுவினரையும் பிரதமர் மோடி வரவேற்றார்.

Comment

Successfully posted