வீட்டு வசதித் திட்டப்பணிகள் குறித்துத் துணை முதலமைச்சர் ஆலோசனை

Dec 13, 2019 07:05 PM 213

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குடிசை மாற்று வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் வீட்டுவசதித் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அலுவலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ் குடிசை மாற்று வாரியத்தால் இதுவரை கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகள், கட்டப்பட்டு வரும் வீடுகள், ஒப்பந்தம் கோரப்பட்டுப் பணிகள் தொடங்க உள்ளவை, ஒப்பந்தம் கோரப்பட உள்ளவை, மதிப்பீடு தயாரிக்க வேண்டியவை குறித்துக் கோட்ட வாரியாக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள், கட்டப்பட்டு வரும் வீடுகள், தொடங்கப்பட உள்ள வீடுகள் குறித்தும் கேட்டறிந்தார். திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்த அனைத்து அதிகாரிகளும் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இந்தக் கூட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Comment

Successfully posted