தந்தையே நம்பாத ஸ்டாலினை நாட்டு மக்கள் எப்படி நம்புவார்கள்? - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Apr 04, 2021 07:34 AM 849

அதிமுக ஆட்சியில் தமிழ்நாடே செழுமையாக காணப்படுகிறது என்றும், அவதூறுகளை அள்ளிவீசி ஆட்சிக்கு வரத்துடிக்கும் ஸ்டாலினின் கனவு பலிக்காது என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

ஓமலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மணியை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய முதலமைச்சர், அதிமுக ஆட்சியில் வறட்சி நீங்கி, எங்கும் செழுமை காணப்படுகிறது என்றார். வருண பகவான், இயற்கை, மக்கள் என அனைத்துமே அதிமுகவுக்கு சாதகமாக இருப்பதாக முதலமைச்சர் கூறினார்.

அதிமுக ஆட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை பொய்யாக சொல்லி, அவதூறு பிரசாரத்தின் மூலமாக ஆட்சியை பிடித்து விடலாம் என ஸ்டாலின் கனவு காண்கிறார், அது ஒருபோதும் பலிக்காது என்றும் முதலமைச்சர் கூறினார்.

கருணாநிதி, உடல்நலம் குன்றி வீட்டில் இருந்தபோதும் கூட, ஸ்டாலினை நம்பி கட்சித்தலைவர் பதவியை கொடுக்கவில்லை எனக்கூறிய முதலமைச்சர், தந்தையே நம்பாத ஸ்டாலினை நாட்டு மக்கள் எப்படி நம்புவார்கள் என கேள்வி எழுப்பினார்.


இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி, திமுக ஆட்சிதான் எனக்கூறிய முதலமைச்சர், காலத்தால் அழிக்க முடியாத கரும்புள்ளியை திமுக பெற்றிருக்கிறது என குற்றம்சாட்டினார்.

Comment

Successfully posted