குரூப் 2ஏ தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி?: சிபிசிஐடி விளக்கம்

Feb 03, 2020 09:09 PM 559

குரூப் 2ஏ தேர்வில் முக்கிய குற்றவாளி ஜெயக்குமாரை சிபிசிஐடி காவல்துறையினர் தீவிரமாக தேடி வரும் நிலையில், முறைகேடு நடந்தது எப்படி? என்பது குறித்து சிபிசிஐடி விளக்கம் அளித்துள்ளது.

தேர்வில் முறைகேட்டில் ஈடுபட ஜெயக்குமார், நபர் ஒருவருக்கு 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை பெற்றதாகவும் சிபிசிஐடி தெரிவித்துள்ளது. முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் தேர்வில் 20 வினாவிற்கு மட்டும் பதில் அளித்தால் போதும் என்றும், எளிதில் அழியக் கூடிய பேனாவில் எழுதினால் போதும் என்றும் ஜெயக்குமார் அவர்களிடம் தெரிவித்துள்ளார். அவ்வாறு விடையளிக்கப்பட்ட விடைத்தாள்களை ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை வரும் வழியில் ஜெயக்குமார் சரியான பதில்களை விடைத்தாள்களில் பூர்த்தி செய்து அனுப்பியுள்ளார் என்று சிபிசிஐடி விளக்கம் அளித்துள்ளது.

ஜெயக்குமார் தலைமறைவாக உள்ள நிலையில், தற்போது வரை தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 9 பேரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் 10 பேரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted