தமிழ் சினிமாவில் 2019-ம் ஆண்டு மட்டும் இத்தனை திரைப்படங்களா..? முழு பட்டியல் இதோ..

Dec 31, 2019 10:53 AM 1222

ஒரு நிகழ்வை தொகுத்து, கதையாக எழுதி, அதனை காட்சியாக பிரதிபலித்து படமாக வெளியிடுகின்றனர். கதையின் ஆழம் மற்றும் நேரத்தை பொறுத்து அவை திரைப்படம், ஆவணப்படம் , குறும் படம் என வகைப்படுத்துகின்றனர்.

அவ்வாறு தமிழ் சினிமாவில் 2019-ம் ஆண்டு மொத்தம் 209 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதில் 3 படங்கள் தவிர்த்து மீதமுள்ள அனைத்து படங்களும் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 'களவு', 'சிகை' மற்றும் 'இக்லோ' ஆகிய படங்கள் ஜீ 5 செயலியில் வெளியானது. இந்த படங்களின் பெயர்கள் , வெளியான மாதம், தேதி ஆகியவற்றின் தகவல்கள் இதோ..

ஜனவரி

4 - தேவக்கோட்டை காதல், மாணிக்
9 - சிகை (ஜீ 5 செயலில் நேரடியாக வெளியிடப்பட்டது)
10 - பேட்ட, விஸ்வாசம்
25 - சார்லி சாப்ளின் 2, குத்தூசி, சிம்பா

பிப்ரவரி

1 - பேரன்பு, பேய் எல்லாம் பாவம், சகா, சர்வம் தாளமயம், வந்தா ராஜாவாதான் வருவேன்
7 - தில்லுக்கு துட்டு 2, பொதுநலன் கருதி
8 - அவதார வேட்டை, நேத்ரா, உறங்காபுலி,வாண்டு
9 - களவு (ஜீ 5 செயலில் வெளியீடு)
14 - தேவ், கோகோ மாகோ
15 - சித்திரம் பேசுதடி 2, 7-வது காதல், காதல் மட்டும் வேணா
21 - டுலெட்
22 - அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய், கண்ணே கலைமானே, எல்.கே.ஜி, பெட்டிக்கடை

மார்ச்

1 - தேடி வந்த நோய், அடடே, விளம்பரம், பிரிவதில்லை, தாதா 87, தடம், 90 ML, திருமணம்
8 - கபிலவஸ்து, ஸ்பாட், பொட்டு, சத்ரு, பூமராங்
15 - கில்லி பம்பரம் கோலி, அகவன், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜுலை காற்றில், நெடுநல்வாடை
22 - சேட்டக்காரங்க, பதனி, நீர்த்திரை, மானசி, பட்டிபுலம், சாரல், அக்னி தேவி, எம்புரான்
28 - ஐரா
29- சூப்பர் டீலக்ஸ்

ஏப்ரல்

4- நட்பே துணை
5 - கணேசா மீண்டும் சந்திப்போம், குடிமகன், குப்பத்து ராஜா, உறியடி 2
12 - கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ், ராக்கி தி ரவென்ஞ்ச், வாட்ச்மேன், ழகரம்
19- காஞ்சனா 3, மெஹந்தி சர்க்கஸ், வெள்ளைப் பூக்கள்
26- அழகரும் இரண்டு அல்லக்கைகளும், முடிவில்லா புன்னகை

மே

1 - தேவராட்டம்
3 - கே 13, தனிமை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
10 - எங்கு சென்றாய் என் உயிரே, கீ, உண்மையின் வெளிச்சம், வேதமானவன்
11 - 100, அயோக்யா
17- மான்ஸ்டர், Mr.லோக்கல், நட்புன்னா என்னான்னு தெரியுமா
24 - லிசா, நீயா 2, ஒளடதம், பேரரழகி ISO, சீனி, வண்ணக்கிளி பாரதி
31- தேவி 2, என்.ஜி.கே, திருட்டுக் கல்யாணம்

ஜூன்

5 - 7
7 - கொலைகாரன், ஜெயிக்கப் போவது யாரு, ருசித்து பார் என் அன்பை
14 - கேம் ஓவர், சுட்டுப்பிடிக்க உத்தரவு, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு
21 - தும்பா, மோசடி
28 - சிந்துபாத், ஜீவி, தர்ம பிரபு, நட்சத்திர ஜன்னலில்

ஜூலை

5 - ஹவுஸ் ஓனர், எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல, களவாணி 2, காதல் முன்னேற்ற கழகம், ராட்சசி, வாழ்த்துகிறேன்
12 - கூர்கா, கொரில்லா, போதை ஏறி புத்தி மாறி, தோழர் வெங்கடேசன், வெண்ணிலா கபடி குழு 2
17 - இக்லோ (ஜீ 5 செயலியில் வெளியீடு)
19 - ஆடை, கடாரம் கொண்டான், உணர்வு,
26 - ஆறடி, ஏ 1, சென்னை பழனி மார்ஸ், கொளஞ்சி

ஆகஸ்ட்

1 - கழுகு 2
2 - ஐஆர்8, ஜாக்பாட், தொரட்டி
8 - நேர்கொண்ட பார்வை
9 - கொலையுதிர் காலம், ரீல், சீமபுரம், வளையல்
15 - கோமாளி
16 - மான்குட்டி
22 - கென்னடி கிளப்
23 - பக்ரீத், காதல் பிரதேசம், மெய்
20 - சாஹோ, சிக்சர், குற்ற நிலை, மயூரன்

செப்டம்பர்

6 - மகாமுனி, சிவப்பு மஞ்சள் பச்சை, ஜாம்பி
13 - என் காதலி சீன் போடுறா, ஒங்கள போடணும் சார், பெருநாளி
20 - காப்பான், ஒத்த செருப்பு சைஸ் 7, சூப்பர் டூப்பர்
27 - என்றும் உன் நினைவிலே, கோலா, நமக்குள் நாம், நம்ம வீட்டுப் பிள்ளை, திட்டம் போட்டு திருடுற கூட்டம்

அக்டோபர்

4 - அசுரன், 100% காதல்
11- அருவம், பெட்ரோமாக்ஸ், பப்பி
18 - பெள பெள, காவியன்
25 - பிகில், கைதி

நவம்பர்

8 - பட்லர் பாலு, மிக மிக அவசரம், தவம்
15 -ஆக்‌ஷன், சங்கத்தமிழன்
22 - ஆதித்ய வர்மா, கேடி (எ) கருப்பு துரை, மேகி, பணம் காய்க்கும் மரம், பேய் வால பிடிச்ச கதை,
29 - அடுத்த சாட்டை 2, அழியாத கோலங்கள் 2, எனை நோக்கி பாயும் தோட்டா, மார்க்கெட் ராஜா MBBS, தீமைக்கும் நன்மை செய்

டிசம்பர்

6 - தனுசு ராசி நேயர்களே, குண்டு, இருட்டு, ஜடா
13 - 50 ரூபா, கேப்மாரி, சாம்பியன், சென்னை டூ பாங்காக், காளிதாஸ், கருத்துகளைப் பதிவு செய், மெரினா புரட்சி, மங்குனி பாண்டியர்கள், திருப்பதிசாமி குடும்பம்
20 - ஹீரோ, கைலா, பரமு, தம்பி, விருது
27 - 50/50, நான் அவளை சந்தித்த போது, பக்சராசரம், சில்லுக் கருப்பட்டி, உதய், வி 1, பரிகாரம்

 

Comment

Successfully posted